தமிழ் சினிமாவில் இருக்கும் பெரும்பாலான கதாநாயகிகள் மலையாள திரையுலகில் இருந்து வந்தவர்களே. அந்த வரிசையில் தற்போது நடிகை பிரியம்வதா கிருஷ்ணனை தமிழ் சினிமாவுக்கு வர தயாராகி வருகிறார்.

மலையாளத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான ‘நரிவேட்ட’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியம்வதா. இதில் டொவினோ தாமஸ் மற்றும் சேரன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் பாராட்டுதலையும் வரவேற்பையும் பெற்றது.
அதற்கு முன் அவர் ‘ரோஷாக்’, ‘சம்ஷயம்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும், ‘நரிவேட்ட’ படத்தில் அவரது நடிப்பும் அழகும் பிரமிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, இப்படத்தில் இடம்பெற்ற ‘மின்னல்வல’ என்ற பாடல் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனம் கிடைக்கச் செய்தது. இதன் காரணமாக சில தமிழ் திரைப்பட இயக்குநர்கள் அவரை தமிழில் அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.