ஆன்மிகக் கதையம்சம் கொண்ட திரைப்படம் தான் ‘கண்ணப்பா’. இந்த படத்தை, புகழ்பெற்ற மகாபாரதம் தொடரை இயக்கிய பாலிவுட் இயக்குனர் முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார். இறைவன் சிவனை மனமுவந்து வணங்கிய அவரது தீவிர பக்தரான கண்ணப்பரை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதோடு, மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்ஷய் குமார், பிரீத்தி முகுந்தன், மோகன்பாபு உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் இதில் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘கண்ணப்பா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் பான் இந்தியா திரைப்படமாக ஜூன் 27ம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது. இதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் டிரெய்லரும் வெளியாகி வைரலாகி வருகிறது.