Touring Talkies
100% Cinema

Friday, August 1, 2025

Touring Talkies

இயக்குனர் ராம்-ன் ‘பறந்து போ’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பாடகர் விஜய் யேசுதாஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பழம்பெரும் பின்னணி பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ். சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகமான இவர் தென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தியிலும் நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

இசைத் துறையில் சாதனைகள் சாதித்தாலும், நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் உள்ளது. பாடகராக சில மலையாளப் படங்களில் தோன்றிய இவர் ‘அவன்’ என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் அந்த படம் அதிரடி வரவேற்பை பெறவில்லை. பிறகு தனுஷ் நடித்த ‘மாரி’ படத்தில் வில்லனாக நடித்து கவனம் பெற்றார். தொடர்ந்து வில்லன் வாய்ப்புகள் வந்த பிறகு, நடிப்பிலிருந்து ஓரளவிற்கு விலகி இருந்தார். சில ஆண்டுகள் கழித்து, ‘படை வீரன்’ என்ற படத்தில் நாயகனாக நடித்தார். அந்தப் படம் பெரிதும் அவருக்கு உதவவில்லை. அதன் பிறகு ‘சாலமன்’ என்ற 3டி படத்தில் நடித்தார். பான் இந்தியா படமாக வெளியான இந்த படம் கூட சரியாக போகவில்லை.

இந்த நிலையில், தற்போது அவர் ராம் இயக்கத்தில் ‘பறந்து போ’ என்ற படத்தில் முக்கியமான கேரக்டரிலிருந்து நடித்து வருகிறார். இதில் அவர் நாயகன் மிர்ச்சி சிவாவின் நண்பராக நடித்ததாக கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News