Touring Talkies
100% Cinema

Monday, June 9, 2025

Touring Talkies

தென்னிந்திய சினிமா மக்களை சார்ந்த கதைகளையே மையமாகக் கொண்டு திரைப்படங்களை உருவாக்கும் திறமை கொண்டது -இயக்குனர் ராம் கோபால் வர்மா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் சில திரைப்படங்களை ரீமேக் செய்து, ரஜினிகாந்த், சிரஞ்சீவி, என்.டி.ஆர் மற்றும் ராஜ்குமார் போன்ற தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களாக புகழ் பெற்றதாக முன்னணி திரைப்பட இயக்குநர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

ஒரு சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது, “1970 மற்றும் 1980-ஆம் ஆண்டுகளில், தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு என அனைத்து முக்கியமான தென்னிந்திய திரைப்பட துறைகளும் அமிதாப் பச்சன் நடித்த படங்களை ரீமேக் செய்தன.

இந்த ரீமேக் திரைப்படங்களில் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, என்.டி. ராமராவ் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் நடித்ததன் மூலம் அவர்கள் பெரும் புகழ் பெற்றனர். தென்னிந்திய சினிமா பெரும்பாலும் பரந்த ரசிகர்களை ஈர்க்கக்கூடிய, மக்கள் சார்ந்த கதைகளையே மையமாகக் கொண்டு திரைப்படங்களை உருவாக்கும் தொழில்நுட்ப திறமை கொண்டது” என தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News