Touring Talkies
100% Cinema

Monday, June 9, 2025

Touring Talkies

இரவு சிரித்து பேசியவர் காலையில் இல்லை… தந்தையின் இழப்பு குறித்து நடிகர் ஷைன் டாம் சாக்கோ உருக்கம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ தமிழில் ‘பீஸ்ட்’, ‘குட் பேட் அக்லி’ போன்ற படங்களில் நடித்தவர். இரண்டு நாட்களுக்கு முன்னர், மருத்துவ சிகிச்சைக்காக கேரளாவிலிருந்து பெங்களூருவிற்கு தனது குடும்பத்துடன் காரில் பயணம் செய்தார். இரவு நேரத்தில் பயணித்த இவர்களது கார் காலையில் தர்மபுரி அருகே விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை பி.சி. சாக்கோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர்கள் காயமடைந்து முதலில் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தற்போது திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஷைன் டாம் சாக்கோவின் வலது கையில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. விரைவில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிகிச்சை பெற்று வரும் நிலையிலும், இந்த துயரமான விபத்து குறித்து ஷைன் டாம் சாக்கோ உருக்கமாக கூறியதாவது, “முழு இரவும் என் தந்தை நகைச்சுவை பேசிக்கொண்டே எங்களுடன் வந்தார். 

வழியில் ஆலப்புழாவில் காரை நிறுத்தி இரவு உணவு சாப்பிட்டோம். அதன் பிறகு, மாத்திரை சாப்பிட்டு சிறிது நேரம் தூங்கி விட்டேன். காலை நேரத்தில் விபத்து நேர்ந்தபோது எனக்கு விழிப்பு வந்தது. ஆனால் என்ன நடந்தது என்பதை உணர்ந்து பார்த்தபோது, என் தந்தை உயிருடன் இல்லை என்பதை புரிந்து கொண்டேன்” என்று கண்கலங்க கூறினார்.

- Advertisement -

Read more

Local News