Touring Talkies
100% Cinema

Saturday, June 7, 2025

Touring Talkies

மறைந்த இயக்குனர் விக்ரம் சுகுமாரன் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கி உதவிய இராவண கோட்டம் பட தயாரிப்பாளர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் எதிர்பாராத மறைவு தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விக்ரம் சுகுமாரனின் இந்த திடீர் மறைவு திரையுலகினருக்கு மட்டுமல்ல அவரது குடும்பத்தினருக்குமே ஈடுசெய்ய முடியாத இழப்பு என்பதால் அவரின் குடும்பத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக அவரது ‘இராவண கோட்டம்’ படத்தை தயாரித்த தயாரிப்பாளர் கண்ணன் ரவி ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். நடிகர் சாந்தனு பாக்யராஜ், அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, பெப்சி தலைவர் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி உள்ளிட்டோர் முன்னிலையில் விக்ரம் சுகுமாரனின் தாயாரிடம், தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் மகன் தீபக் ரவி காசோலையை வழங்கினார்.

- Advertisement -

Read more

Local News