Touring Talkies
100% Cinema

Friday, June 6, 2025

Touring Talkies

மணிரத்னம் சாரிடம் உதவி இயக்குனராக என் மகள் பணியாற்றியது எனக்கு பெருமையாக உள்ளது – இயக்குனர் மணிரத்னம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘தக் லைப்’ திரைப்படம் இன்று வெளியானது. இந்த படத்தில், மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றிய உதவி இயக்குநர்களில் குஷ்பு மற்றும் சுந்தர்.சி ஆகியோரின் மகள் அனந்திகா சுந்தரும் ஒருவர்.

இதனைத் தொடர்ந்து, தனது மகளின் பங்களிப்பை நினைத்து நெகிழ்ந்த குஷ்பு, இன்ஸ்டாகிராம் மூலம் உணர்ச்சிப் பூர்வமான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மணிரத்னம் இயக்கிய தக் லைஃப் திரைப்படத்தில் என் மகளின் பெயர் இடம்பெற்றிருப்பதைப் பார்ப்பது ஒரு பெற்றோராக எனக்கு மிகுந்த பெருமையை தருகிறது.

அவளுக்கு முழங்காலில் ஏற்பட்ட வலி காரணமாக குறுகிய காலத்திற்கே உதவி இயக்குநராக பணியாற்ற முடிந்தது. ஆனால், மணி சாரிடம் இருந்து அவள் பெற்ற அறிவும், அனுபவமும் அவளது வாழ்நாளில் நிச்சயம் உதவும். இந்த அனுபவம் மிகுந்த ஆழத்துடன் நிறைந்தது. என் மகளின் பெயர் படத்தில் இடம் பெற்றதற்காக, உங்கள் பெரிய மனதுக்கு என் நன்றிகள் சார் என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News