Touring Talkies
100% Cinema

Thursday, June 5, 2025

Touring Talkies

இயக்குனர் ராம்-ன் பறந்து போ படத்தின் டீஸர் வெளியீடு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

எதார்த்தமான மற்றும் உணர்ச்சிவயப்பட்ட திரைப்படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் இயக்குநர் ராம். “கற்றது தமிழ்”, “தங்க மீன்கள்”, “தரமணி”, “பேரன்பு” போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ள அவர் தற்போது “பறந்து போ” என்ற புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் கதாநாயகனாக மிர்ச்சி சிவா நடித்துள்ளார். அவருடன் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக சந்தோஷ் தயாநிதி பணியாற்றியுள்ளார். பின்னணி இசையை யுவன் ஷங்கர் ராஜா வழங்கியுள்ளார்.

இந்த திரைப்படம், பிடிவாதமான பள்ளி மாணவன் ஒருவனும் பணத்தின் மீது மிகுந்த ஆசை கொண்ட அவனது தந்தையும் நகர வாழ்க்கையை விட்டு விலகி மேற்கொள்ளும் பயணத்தை மையமாகக் கொண்ட ‘ரோடு டிராமா’ வகை திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த படம் ஜூலை மாதம் 4ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

- Advertisement -

Read more

Local News