நடிகை ரேவதி மற்றும் சித்தார்த் ராமசுவாமி இணைந்து இயக்கியுள்ள புதிய வெப் தொடர் “குட் ஒயிப்(Good Wife) . இந்த தொடரில் பிரியாமணி, ஆரி அர்ஜூனன், சம்பத், அம்ரிதா ஸ்ரீனிவாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு பணிகள் தற்போது முழுமையாக முடிந்துள்ளன, மேலும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நடிகை பிரியாமணியின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்த தொடரின் அறிவிப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். குடும்பம் சார்ந்த ஒரு சட்டப் பிரச்சினையை மையமாகக் கொண்டு இந்த வெப் தொடர் உருவாகியுள்ளது. இது விரைவில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.