Touring Talkies
100% Cinema

Tuesday, June 3, 2025

Touring Talkies

ராகவா லாரன்ஸின் ‘பென்ஸ்’ திரைப்படத்தில் நடிக்கிறாரா நிவின் பாலி? வெளியான முக்கிய அப்டேட்! #BENZ

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் ராகவா லாரன்ஸ். தற்போது இவர், பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் பென்ஸ் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை, ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணியாற்றுகிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம், கைதி, லியோ போன்ற திரைப்படங்களை போலவே, பென்ஸ் படமும் அவரது சினிமாட்டிக் யூனிவர்ஸ் (LCU) உடன் இணைந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகவும் அதிகமாக இருக்கிறது.இப்படத்தில் சம்யுக்தா மேனன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், பென்ஸ் திரைப்படத்தின் புதிய போஸ்டரை படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில், “பேடி” எனும் புதிய கதாபாத்திரத்தை நாளை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கதாபாத்திரம் மலையாள நடிகர் நிவின் பாலியாக இருக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், பிரபல நடிகர் மாதவனும் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News