Touring Talkies
100% Cinema

Monday, June 2, 2025

Touring Talkies

‘ஹரி ஹர வீரமல்லு’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கு இத்தனை கோடி செலவானதா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல தெலுங்கு நடிகரும் ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் நடித்துள்ள திரைப்படம் “ஹரி ஹர வீரமல்லு”. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த சரித்திர படமானது, பவன் கல்யாண் நடித்துள்ள முதல் பீரியட் படமாகும். இது 17ம் நூற்றாண்டில் நடைபெறும் ஆக்ஷன் மற்றும் அதிரடிக்கான கதைக்களத்தை மையமாகக் கொண்டது. சிந்தனைமிக்க சமூகத்தைக் கொண்டு, ஊழல் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடும் நாயகனின் வாழ்க்கையை இதன் கதையாகக் கொண்டுள்ளது.

இந்தப் படத்தில் பாபி தியோல், நிதி அகர்வால், நாசர், ரகு பாபு, சுனில் மற்றும் நோரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை அமைப்பாளராக எம்.எம்.கீரவாணி பணியாற்றியுள்ளார். இந்தப் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வருகிற ஜூன் 12ம் தேதி வெளியாக உள்ளது.

இதுபற்றி தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் ஒரு பேட்டியில், “இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக மட்டுமே ரூ.20 கோடிக்கு மேல் கிராபிக்ஸ் வேலை செய்யப்பட்டுள்ளதுடன், இந்த கிராபிக்ஸ் பணிகளை ‘ஆர்.ஆர்.ஆர்’, ‘2.0’ போன்ற பிரமாண்ட படங்களில் பணியாற்றிய டீம் தான் மேற்கொண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News