இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘டி.என்.ஏ’. இதில் நிமிஷா சஜயன், காயத்ரி, ரமேஷ் திலக், சேட்டன், விஜி சந்திரசேகர் மற்றும் ரித்விகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திரைப்படத்தை ஒலிம்பியா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து, ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழகத்தில் வெளியிட உள்ளது.

தற்போது படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து, இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு தீர்மானித்துள்ளது. அதன்படி, வருகிற ஜூன் 20ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் என திட்டமிடப்பட்டுள்ளது.
அதே நாளில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘குபேரா’ படமும் வெளியாகும் நிலையில், அதர்வாவின் இந்தப் படத்திற்கு தேவையான அளவு திரையரங்குகள் கிடைக்குமா என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.