Touring Talkies
100% Cinema

Friday, August 1, 2025

Touring Talkies

கடவுள் எப்போது கொடுக்க வேண்டுமோ அப்போது அந்த செல்வத்தை கொடுப்பார்… நடிகர் சாந்தனு OPEN TALK!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநரும் நடிகருமான பாக்யராஜின் மகனான சாந்தனு. சிறுவயதிலேயே சினிமாவில் நடிப்பதைத் தொடங்கி, பின்னாளில் கதாநாயகனாக உயர்ந்தார், இன்று வரை தனித்துவமான இடத்தை பிடிக்க தொடர்ந்து முயன்று வருகிறார்.

இந்நிலையில், சாந்தனு மற்றும் கீர்த்தி தம்பதிகளுக்கு குழந்தை செல்வம் இல்லை. இதைப் பற்றி சாந்தனுவின் யூடியூப் சேனலில் பலரும் தொடர்ந்து அவரிடம் கேள்விகள் எழுப்பி, தங்கள் கவலையையும், ஆதங்கத்தையும் தெரிவித்துவருகிறார்கள்.

இது குறித்து சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் சாந்தனு, நாங்கள் எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப்போகிறோம் என்று பலரும் தொடர்ந்து கேட்கிறீர்கள். நாங்கள் தயார். ஆனால் நீங்கள் தான் அந்த குழந்தையை வளர்க்கப்போகிறீர்களா? இல்லையே! எனவே இப்படிச் சொல்வதால் என்னை முரட்டுத்தனமானவனாக நினைக்க வேண்டாம். இது எங்களுடைய தனிப்பட்ட வலி. தொடர்ந்து இவ்வாறு கேள்வி கேட்பது எங்களுக்குள் மன அழுத்தத்தை உருவாக்குகிறது. கடவுள் எப்போது குழந்தையை கொடுக்க வேண்டும் என்பதற்கான சரியான நேரத்தைத் தேர்வு செய்திருப்பார் என்று உருக்கத்துடன் பதிலளித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News