ராதிகா ஆப்தே நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிஸ்டர் மிட்நைட்’. பாப்டா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த படம் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், ஒரு நேர்காணலில் பேசிய ராதிகா ஆப்தே, பூரி ஜெகன்நாத் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ளதாக பரவி வரும் தகவலை மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “ஐயோ கடவுளே! அந்தச் செய்தி பற்றி எனக்கு எந்தத் தகவலும் தெரியாது.அந்தப் படத்தில் நான் நடிக்கவில்லை.
‘பிசினஸ்மேன்’, ‘டெம்பர்’, ‘லிகர்’, ‘டபுள் இஸ்மார்ட்’ போன்ற படங்களை இயக்கிய பூரி ஜெகன்நாத், தற்போது ஒரு புதிய பான் இந்தியா படத்தை இயக்க உள்ளார். அந்தப் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை நடிகை சார்மி கவுர் தயாரிக்கின்றார். மேலும், நடிகை தபு இதில் முக்கியமான வேடத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

