தமிழ் திரைப்பட உலகின் மூத்த நடிகரான ராஜேஷ், 75-வது வயதில் மாரடைப்பால் சென்னையில் காலமானார். கதாநாயகன், எதிரணி வேடங்கள், மற்றும் குணச்சித்திர வேடங்களில் அவர் 49 ஆண்டுகளாக 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அவரின் மறைவு திரையுலகிலும், ரசிகர்களிடையிலும் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ராஜேஷின் மறைவுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது இரங்கலையும் வேதனையையும் தெரிவித்துள்ளார். அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
என்னுடைய நெருங்கிய நண்பர், நடிகர் ராஜேஷ் அவர்களின் அகால மரணச் செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. மிகுந்த மன வேதனையைத் தருகிறது. அருமையான மனிதர், அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் என தெரிவித்துள்ளார்.