Touring Talkies
100% Cinema

Wednesday, May 28, 2025

Touring Talkies

விரைவில் ரீ ரிலீஸ் ஆகிறது விஜய்யின் சூப்பர் ஹிட் திரைப்படங்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் வெளியான முன்னணி நடிகர்களின் வெற்றிப்படங்களை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பித்து, திரையரங்குகளில் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்தச் சூழ்நிலையில், விஜய் மற்றும் ஜோதிகா நடித்த 2000-ம் ஆண்டு வெளியான ‘குஷி’ திரைப்படம், மேலும் விஜய் மற்றும் அசின் நடித்த 2005-ம் ஆண்டு வெளிவந்த ‘சிவகாசி’ ஆகிய இரு படங்களும் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளன என அந்தப்படங்களின் தயாரிப்பாளரான ஏ.எம். ரத்னம் தெரிவித்துள்ளார்.

இவரது தயாரிப்பில் கடந்த ஆண்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட ‘கில்லி’ திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வசூலில் அபார வெற்றியை பெற்றது. ரீ-ரிலீஸான தமிழ்ப் படங்களில் மிக அதிகமான வசூலை பெற்ற தமிழ்நாட்டின் முதலாவது படமாக ‘கில்லி’ சாதனை படைத்தது.

- Advertisement -

Read more

Local News