நடிகர் விக்ரம் கடைசியாக நடித்துப் வெளியான திரைப்படம் ‘வீர தீர சூரன் 2’. அதன் பிறகு, ‘மண்டேலா’ மற்றும் ‘மாவீரன்’ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் தற்போது இயக்கும் புதிய திரைப்படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படம் விக்ரமின் 63வது படமாகும்.

இந்தப் படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகைகள் ஸ்ரீ நிதி ஷெட்டி மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோருடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகின.
இந்நிலையில், தற்போது ‘தி கோட்’, ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றி படங்களில் நடித்த பிரபல நடிகை மீனாட்சி சவுத்ரியுடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.