Touring Talkies
100% Cinema

Friday, August 1, 2025

Touring Talkies

ஜென் இ மென் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறாரா நடிகர் விமல்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விமல் ‘பசங்க’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் ‘களவாணி’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘கலகலப்பு’ போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் மறக்க முடியாத இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் ‘சார்’ படம் வெளியானது, மற்றும் அந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, நடிகர் விமல் ‘பரமசிவன் பாத்திமா’ மற்றும் ‘தேசிங்குராஜா 2’ போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே, 2021ஆம் ஆண்டு வெளியான ‘ஜென்.இ.மேன்’ என்ற மலையாள திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விமல் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மலையாள படத்தை ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ புகழ் சிதம்பரம் இயக்கியிருந்தார். இதில் பசில் ஜோசப், லால் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

‘ஜென்.இ.மேன்’ படத்தின் தமிழ் பதிப்பை சிதம்பரத்தின் உதவி இயக்குநர்களில் ஒருவர் இயக்கவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் திட்டம் தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News