திரைப்பட நடிகையாக மட்டுமன்றி, பின்னணி பாடகியாகவும், பாடலாசிரியராகவும், இசையமைப்பாளராகவும் பல்வேறு மொழிகளில் தன்னுடைய கலைத் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார் ஆண்ட்ரியா. தமிழ் சினிமாவில் முன்னணிப் நடிகையாக இருப்பதுடன் தற்போது பாடலாசிரியர் அவதாரமும் எடுத்துள்ளார்.

அண்மையில் ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆண்ட்ரியா, அதில் பாடிக்கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அவரது அழகான மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்துடன் பதிவிட்ட அந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளன. அவர் நடித்த ‘அன்பே சிவம்’, ‘விஷ்வரூபம்’, ‘தூங்கா நகரம்’, ‘தரமணி’ போன்ற திரைப்படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றவை.