பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சுவாசிகா ஆகியோர் இணைந்து நடித்த ‘மாமன்’ படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக, சிலர் மண்சோறு சாப்பிடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலானது.

இதனைத் தொடர்ந்து, சூரி பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது, “மாமன் படம் வெற்றிபெற மதுரையில் மண்சோறு சாப்பிட்டவர்களை என் ரசிகர்கள் என சொல்ல எனக்கு கஷ்டமாக உள்ளது. கதை நல்லதாக இருந்தால், அந்த படம் ஓடுவது இயல்பான விஷயம்.
அந்த செயலைச் செய்வதற்குப் பதிலாக நான்கு பேருக்கு தண்ணீர், மோர் அல்லது உணவு வாங்கி கொடுத்திருக்கலாம். இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடுவோர் எனது உண்மையான ரசிகர்கள் அல்ல. இனிமேல் யாரும் இதுபோன்ற விஷயங்களை செய்ய வேண்டாம் என்று சூரி தனது வருத்தத்தையும் வேதனையையும் வெளிப்படுத்தினார்.