1976-ம் ஆண்டு வெளியான ‘அன்னக்கிளி’ திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறையில் தனது இசைப் பயணத்தைத் தொடங்கியவர் இசைஞானி இளையராஜா. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததுடன், 10,000-க்கு மேற்பட்ட பாடல்களையும் உருவாக்கியுள்ளார்.

சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற ‘வேலியண்ட்’ சிம்பொனி நிகழ்ச்சியில் தனது இசையைச் சமர்ப்பித்து பெருமை சேர்த்த இளையராஜா, தற்போது ‘தட்டுவண்டி’ என்ற புதிய திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். இப்படத்தை விஜயபாஸ்கர் எழுதி இயக்கியுள்ளார்.
சர்வைவல் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆர். எம். நானு இந்த படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது, மேலும் அந்தப் போஸ்டரை இசைஞானி இளையராஜா தான் வெளியிட்டுள்ளார்.