சீக்ரட் ஏஜண்டாக டாம் குரூஸ் நடித்து 1996-ம் ஆண்டு முதன் முதலில் மிஷன் இம்பாஸிபிள் படம் வெளியானது. முதல்பாகம் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்ததாக 7-பாகங்கள் வெளியானது. இவை அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றன. அதனை தொடர்ந்து தற்போது 8-வது பாகமான “மிஷன்: இம்பாசிபிள் தி பைனல் ரெக்கனிங்” உருவாகியிருக்கிறது. இதில், ஹெய்லி அட்வெல், விங் ரேம்ஸ், சைமன் பெக், ரெபேக்கா பெர்குசன், வனேசா கிர்பி, ஈசாய் மோரல்ஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.இப்படம் வருகிற 17ம் தேதி இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் இதுவரை விற்பனை செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.20 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
