நடிகர் சந்தானம் நடித்து நாளை(மே 16) வெளியாக உள்ள, ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் இடம் பெற்ற, ‘கோவிந்தா…’ என்ற பாடல் சிலரிடம் இருந்து எழுந்த எதிர்ப்பின் காரணமாக நீக்கப்பட்டுள்ளது

இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் ‛‛டிடி நெக்ஸ்ட் லெவல்’. நடிகர் ஆர்யா இதை தயாரித்துள்ளார். இப்படத்தில் கௌதம் மேனன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
நாளை மே 16ல் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் இப்படத்திலிருந்து ‘Kissa 47′ என்ற பாடலின் வரிகளில் ‛‛பார்க்கிங் காசுக்கு கோவிந்தா, பாப்கார்ன் டாக்ஸ் கோவிந்தா, ஹீரோயின் நடிப்புக்கு கோவிந்தா…” என ‛ஸ்ரீனிவாச கோவிந்தா’ எனும் பெருமாள் பாடலை கிண்டல் செய்வதாக எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் இந்த பாடல் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.