தமிழ் திரையுலகில் ‘கண்ட நாள் முதல்’ என்ற திரைப்படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமானவர் ரெஜினா கசாண்ட்ரா. பின்னர் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘ராஜதந்திரம்’, ‘மாநகரம்’, ‘சரவணன் இருக்க பயமேன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு மொழியிலும் பல படங்களில் நடித்துள்ள அவர், அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தில் வில்லியாக நடித்திருந்தார்.
தற்போது சுந்தர்.சி இயக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ என்ற படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார். இதேபோன்று ஹிந்தி மொழியில் சன்னி தியோல் நடித்த ‘ஜாத்’ மற்றும் அக்ஷய் குமார் நடித்த ‘கேசரி 2’ ஆகிய படங்களிலும் அவர் நடித்த கதாபாத்திரங்கள் வரவேற்பை பெற்றன. இதனால் தற்போது ஹிந்தி திரையுலகிலும் அதிக கவனம் செலுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.