இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிய ‘RRR’ திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலம் பெற்றவர் ராம் சரண். தற்போது அவர் ‘பெத்தி’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வரும் ஆண்டு மார்ச் 27ம் தேதி வெளியாகும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனிடையே, ‘பெத்தி’ திரைப்படத்தில் ‘ரங்கஸ்தலம்’ படத்தைவிட அதிக உணர்ச்சிப் பூர்வமான காட்சிகள் இருப்பதாக ராம் சரண் கூறியுள்ளார். சமீபத்தில் லண்டனில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அவரது மெழுகு சிலை நிறுவப்பட்ட விழாவில், குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.
அந்த விழாவில் பேசிய ராம் சரண், “‘பெத்தி’ திரைப்படம் தொடர்பாக சுவாரஸ்யமான தகவல்களை” பகிர்ந்தார். “படத்தின் சுமார் 30 சதவீதம் வரை படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ‘ரங்கஸ்தலம்’ படத்தைவிட ‘பெத்தி’யில் சிறப்பான அம்சம் நிறைய இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இதை உங்களிடம் உறுதியாகச் சொல்கிறேன். இம்மாத நடுப்பகுதியில் மீண்டும் படப்பிடிப்பு தொடரும்,” என்று அவர் தெரிவித்தார்.