தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ‘கூலி’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது முடிந்து, அதன் பின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் அளித்த சமீபத்திய பேட்டியில், ரசிகர்கள் ‘லியோ’ படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் சாரை வைத்து இயக்க வேண்டும் என பெரிதும் எதிர்பார்க்கின்றனர் ஆனால், தான் ‘மாஸ்டர்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதில் அதிக விருப்பம் கொண்டிருக்கிறேன் என கூறினார்.
விஜய்யை “ஜே.டி.” என்ற கதாபாத்திரத்தில் மீண்டும் பார்ப்பது தான் மிகவும் விருப்பமானதாக இருப்பதாகவும், ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் இன்னும் சொல்லப்பட வேண்டிய பல அம்சங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இது விஜய்க்கும் தெரியும் எனவும் கூறினார். இந்த பேட்டிக் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது.