துப்பாக்கி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆஷிப். சமீபத்தில் வெளியான சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விக்ரமின் “துருவ நட்சத்திரம்” படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ‘ரெட்ரோ’ படத்தில் தான் நடித்துள்ள பெரும்பாலான காட்சிகள் நீக்கப்பட்டு விட்டதாக ஆஷிப் தெரிவித்துள்ளார்.சூர்யாவுடன் 18 நாட்கள் ரெட்ரோ படத்தில் பணிபுரிந்தேன். சில காரணங்களால் படத்தில் சில காட்சிகள் வரவில்லை. இது வருத்தமாக இருந்தாலும், சூர்யாவுடன் நடித்தது மறக்க முடியாதது.தமிழ் என் சொந்த நிலம் போல் ஆகிவிட்டது. இங்கு இருக்கும்போது தான் நான் மிக சுதந்திரமாக உணர்கிறேன்.
