Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

அட்லி – அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் AA22XA6 படத்தில் இப்படியொரு பிரம்மாண்ட காட்சியா? வெளியான பல சுவாரஸ்யமான தகவல்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் அல்லு அர்ஜுனும், இயக்குநர் அட்லியும் இணையும் பிரம்மாண்ட திரைப்படம் AA22XA6. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.இப்படம் சுமார் ரூ.800 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் கதாநாயகிகளாக மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர் மற்றும் ஒரு ஹாலிவுட் நடிகை ஒருவரும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படம் வேற்றுக்கிரகத்தை மையமாக கொண்ட கதையுடன் உருவாக உள்ளது. இதற்குமுன் இத்தகைய கதைமாதிரியில் ஹாலிவுட்டில் வெளியான சில திரைப்படங்களின் தரத்தில் இந்த படத்தை உருவாக்க உள்ளார் இயக்குநர் அட்லி.

முக்கியமாக, இந்த திரைப்படத்தில் நடிப்பதற்குமுன் அல்லு அர்ஜுனுக்கு தனியான பயிற்சி பட்டறை மூலம் புதுமையான நடிப்பு முறைகள் கற்றுத்தரப்படவுள்ளதுடன், அவரது தோற்றத்திலும் மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக அல்லு அர்ஜுன் அடுத்த மாதம் தொடங்கவுள்ள பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டு, படப்பிடிப்பிற்காக தன்னை முழுமையாக தயார் செய்ய உள்ளார்.

மேலும், இந்த படத்தில் வில்லன்களுடன் அல்லு அர்ஜுன் மோதும் ஒரு முக்கியமான சண்டைக் காட்சி தண்ணீருக்கடியில் படமாக்கப்படவுள்ளது. இந்த காட்சிக்காக தண்ணீருக்கடியில் 20க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான கோப்ரா கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு, அந்த காட்சி பிரமாண்டமாக உருவாக்கப்பட உள்ளது. இந்த வேற்றுக்கிரக கதைக்கேற்ப அல்லு அர்ஜுனின் ஹேர் ஸ்டைல் மட்டுமல்லாமல், அவரது உடல் மொழியும் முழுமையாக மாற்றப்பட்டு, இதுவரை காணாத வகையில் ஒரு புதுமையான தோற்றத்தில் அவரை வெளிப்படுத்தும் முயற்சியில் அட்லி ஈடுபட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News