தென்னிந்திய திரைப்படத் துறையில் முன்னணி நடிகராக விளங்கி வரும் ஜூனியர் என்.டி.ஆர், ‘வார் 2’ படத்தைத் தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தற்காலிகமாக ‘என்டிஆர் 31’ என அழைக்கப்படுகிறது.2026-ம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி இப்படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கவிருக்கிறார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இயக்குநர் பிரசாந்த் நீல், இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனாவையும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜூனியர் என்.டி.ஆரின் ஜோடியாக ருக்மணி வசந்த் நடிப்பதாக கூறப்படும் நிலையில், ராஷ்மிகா மந்தனாவுக்கு ஒரு சிறப்பான துணை வேடம் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.