மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், நாசர், நரேன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘ட்ரைன்’. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், இப்படத்தின் முழு கதையையும் மிஷ்கின் நேரடியாகப் பகிர்ந்துள்ளார். அந்தக் காணொளி சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. “என்ன சார், இப்படித் தான் முழுக்கதையையும் சொல்லிட்டீங்களே!” என்று ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
மிஷ்கின் சொன்ன கதைப்படி, வாழ்க்கையில் விரக்தியடைந்த ஒருவர் ஒரு ட்ரைனில் பயணிக்கிறார். அந்த பயணத்தில் அவர் வாழ்க்கையின் உண்மையை புரிந்துகொள்கிறார் என்பதே இந்தக் கதையின் மையக்கரு.