நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தற்போது சந்தீப் கிஷன் நடிப்பில் ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். கடந்த இரண்டு மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சந்தீப் கிஷனின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு ஸ்பெஷல் வீடியோ வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இப்படத்தின் மேக்கிங் வீடியோவும் வெளியானது.

இந்நிலையில், ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்த திரைப்படம் சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாராகி வருகிறது என ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது என்றாலும், முதல் காப்பி அடிப்படையில் இப்படத்தை ஜேசன் சஞ்சய் தான் சொந்தமாக தொடங்கியுள்ள புதிய நிறுவனமான ‘ஜேசன் சஞ்சய் ஜோசப் மீடியா என்டர்டெயின்மென்ட்’ மூலம் தயாரித்து வழங்குகிறார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இயக்குநராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் ஜேசன் சஞ்சய் இந்தப் படத்தில் செயல்பட்டு வருகிறார்.