தமிழ் திரைப்படத்தில் நடிகராக தனது பயணத்தைத் தொடங்கி 23 ஆண்டுகள் கடந்துள்ளார் நடிகர் தனுஷ். இப்போது அவர் ஒரு நடிகராக மட்டுமின்றி, தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர் என பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தி திரையுலகில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
2002-ஆம் ஆண்டு வெளியான “துள்ளுவதோ இளமை” திரைப்படம் மூலம் தனுஷ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின் பல வெற்றிப் படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக திகழ்கிறார். தமிழ் மட்டுமல்லாது, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.
தற்போது அவர் நடித்துள்ள ‘குபேரா’ திரைப்படம் பணிகள் முடிவடைந்து உள்ளது. இதில் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் மாதம் 20-ஆம் தேதி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் தனுஷின் திரை பயணத்தில் 23 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ‘குபேரா’ படக்குழு ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தில் தனுஷ் ‘தேவா’ எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாக அறிவித்துள்ளது.