Touring Talkies
100% Cinema

Tuesday, September 9, 2025

Touring Talkies

மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் நடிக்கும் ஹாரர் த்ரில்லர் படமான ‘டைஸ் ஜரே’ !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2024-ம் ஆண்டில் வெளியான சிறந்த மலையாள படங்களில் ஒன்றாக சிறந்த படம் என குறிப்பிடப்பட்ட படம் ‘பிரமயுகம்’. இந்த படத்தில் மம்மூட்டியின் பிரமாண்டமான நடிப்பு, தரமான ஒளிப்பதிவு, இசை மற்றும் தயாரிப்பு வடிவமைப்புகள் போன்றவை விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரிதும் பாராட்டப் பெற்றன. இந்த திரைப்படத்தை ராகுல் சதாசிவன் இயக்க, ‘நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்தது. தற்போது, ராகுல் சதாசிவன் இயக்கும் அவரது இரண்டாவது படத்தையும் இதே நிறுவனம் தயாரிக்கிறது. புதிய படத்துக்கு ‘டைஸ் ஐரே’ எனப் பெயரிட்டுள்ளதாக படக்குழு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்தில் மோகன்லாலின் மகனான பிரணவ் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தைப் பற்றிக் கூறிய தயாரிப்பாளர் சக்ரவர்த்தி ராமச்சந்திரன், “‘பிரமயுகம்’ படத்தின் மூலம் இந்திய திகில் திரைப்படங்கள் எந்தளவுக்கு முன்னேற முடியும் என்பதை நிரூபித்தோம். ‘டைஸ் ஐரே’ படமும் அதற்குப் பிறகு உருவாகும் ஒரு முக்கிய படைப்பு. இந்தப் படத்தின் வாயிலாக பிரணவ் மோகன்லால் தன்னை நன்கு நிலைநாட்டுவார் என நாங்கள் நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.

‘டைஸ் ஐரே’ என்ற சொல்லுக்கான அடிப்படை 13ம் நூற்றாண்டில் உருவான லத்தீன் பாடலிலிருந்து வந்ததாகும். இது ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் பயன்படுத்தப்பட்ட ஒரு பிரார்த்தனை பாடல். அதன் பொருள் “இறுதித் தீர்ப்பு” என்பதாகும். காலத்தினைப் பொறுத்து இந்தச் சொல் பயம், அழிவு மற்றும் மறைமுகமான அம்சங்களை குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. திகில் சார்ந்த அனுபவத்தை வழங்கும் இந்தப் படத்துக்கு இந்த தலைப்பு சரியாக பொருந்தும் எனக் கூறப்படுகிறது.

இப்படம் குறித்தாக இயக்குநர் ராகுல் சதாசிவன் கூறும்போது, “‘டைஸ் ஐரே’ என் முந்தைய படங்களைவிட முற்றிலும் மாறுபட்டது. இது புதிய அனுபவங்களை ஆராயும் வகையில், இன்றைய இளைய தலைமுறையின் திகில் அனுபவங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு புதிய பாணியில் இருக்கும் என நம்புகிறேன். இந்திய திகில் சினிமாவை ஒரு புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது. தற்போது படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு இறுதியில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

- Advertisement -

Read more

Local News