‘பசங்க’ திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான விமல், 2013-ம் ஆண்டு எழில் இயக்கத்தில் நடித்த ‘தேசிங்குராஜா’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டு வருகிறது.

‘தேசிங்குராஜா 2’ திரைப்படம், முதல் பாகத்தைவிட மாறுபட்ட கதைக்களத்திலும், அதேபோல் நகைச்சுவையுடன் கூடிய கதையாக உருவாகி வருகிறது. இதில் விமலுடன் சேர்ந்து ‘குக் வித் கோமாளி’ புகழ் ரவி, மரியா மற்றும் ஹர்ஷிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தை இன்பினிட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளராக வித்யாசாகர் பணியாற்றுகிறார். இப்படம் குறித்த எதிர்பார்ப்பு உயர் நிலையில் உள்ள நிலையில், படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் ஜூலை 11ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.