கவுதம் மேனன் இயக்கிய அண்மைய திரைப்படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்துள்ளன. இதனால், கடன் சுமையால் அவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் சந்தானத்துடன் இணைந்து ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் கவுதம் மேனன் நடித்ததற்கான ஒரு முக்கியக் காரணம் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, விஷாலுடன் அவர் தனது அடுத்த திரைப்படத்துக்கான பேச்சுவார்த்தைகளை முன்னமே ஆரம்பித்துள்ளார். மேலும், சந்தானத்திற்கும் ஒரு புதிய கதையை அவர் கூறியுள்ளார்.
இந்த புதிய திரைப்படத்தையும், ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தை தயாரித்த நிகாரிஹா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த புதிய படத்தை தயாரிக்க இருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.