தெலுங்கு திரைப்படங்களின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஸ்ரீலீலா.சமீபத்தில் ‘புஷ்பா-2’ திரைப்படத்தில் அவர் ஆடிய கிஸ்க் பாடல் நடனம் இந்திய அளவில் பெரும் கவனம் பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, ஹிந்தியில் கார்த்திக் ஆர்யனுடன் புதிய ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும், தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பான் இந்தியா அளவில் பிரபலமான நடிகையாக உயர்ந்துள்ள ஸ்ரீலீலா, தன் சினிமா பயணத்தைப் பற்றி பகிர்ந்துள்ளார். அதில் சினிமா உலகத்தில் இவ்வளவு ரசிகர்களை நான் கவர்ந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தெலுங்கு மொழியைத் தாண்டி, ‘பராசக்தி’ திரைப்படம் மூலம் தமிழில் முதன்முறையாக நடித்துள்ளேன்.
மேலும் பல தமிழ் படங்களில் நடித்து ஜொலிக்க வேண்டும் என விரும்புகிறேன். அதேபோல் பாலிவுட் சினிமாவிலும் நடிப்பது எனக்கு சிறப்பான உணர்வை உருவாக்குகிறது. பாலிவுட்டில் நடிப்பது பலருக்கும் ஒரு கனவு, அந்த கனவு எனக்கு நனவானது என்பது பெருமையாக இருக்கிறது. எப்போதும் சிறந்த கதைகளில் நடித்து, ரசிகர்களின் மனங்களில் நிலையான இடம் பிடிக்க விரும்புகிறேன் என கூறியுள்ளார்.