ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு, இயக்குனர் ராஜமவுலி தற்போது மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்கும் ஒரு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடிக்கிறார். சாகசங்களால் நிரம்பிய திரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்தில், மகேஷ் பாபு இந்தியானா ஜோன்ஸ் பாணியில் அமைந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

படப்பிடிப்பு தொடங்கியதும், நடிகர்கள் அடிக்கடி விடுமுறை எடுக்க வேண்டாம் என்று கூறிய ராஜமவுலி, சில வாரங்களுக்குள் ஒரு பிரேக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடத்தப்பட்டு முடிந்த நிலையில், தற்போது கோடை விடுமுறையை வழங்கியுள்ளார்.
இந்த வார முடிவில் லண்டனில் நடைபெறவுள்ள ஆர்ஆர்ஆர் தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் ராஜமவுலி பங்கேற்கிறார். அதனையடுத்து, மே மாத இறுதியில் மீண்டும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், குறுகிய காலத்திலேயே இரு முறை படப்பிடிப்புக்கு இடைவேளை அளித்திருக்கிறார் ராஜமவுலி.