நடிகை அபிநயா சமீபத்தில் 15 வருடமாக இருவரும் நண்பர்களாகவே இருந்துவிட்டோம். காதல் என்று வரும்போது கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஆனால், கார்த்திக் ரொம்ப ஸ்வீட்டான பர்சன். என்னை பார்த்ததும் கண்டு பிடித்துவிடுவார் நான் சோகமாக இருக்கிறேனோ, அழுகுறேனோ, சந்தோஷமா இருக்கேனோ என்பதை கண்களாலே பார்த்து தெரிந்துகொள்வார். கொஞ்ச நேரம் அமைதியாக இருப்பார். பிறகு என்னிடம் வந்து பேசி அதை சரி செய்வார். எல்லோருடைய காதலுக்கு மொழி தேவைப்படலாம். எங்க காதலுக்கு மொழியே தேவையில்லை. மனது முழுக்க அன்பும், சிரிப்பும் நிறைந்து இருக்கிறது என அபிநயா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும் நாங்க 2 பேருமே டாம் ஜெர்ரி மாதிரி சண்டை போட்டுக்குவோம். செல்லமா சண்டையும் போட்டுருக்கோம். நிறைய ஜோக்ஸ் சொல்லுவாரு. என்னை எப்படி சமாதானப்படுத்துறதுன்னு அவருக்கு தெரியும். இந்த காதல் தான் திருமணம் வரைக்கும் கொண்டு வந்திருப்பதாக அபிநயா தெரிவித்துள்ளார்.
