2023ஆம் ஆண்டு, ஷாருக்கான் நடித்த பதான், ஜவான் மற்றும் டங்கி ஆகிய மூன்று படங்களும் வெளியிடப்பட்டு வெற்றியை கண்டன. இதனைத் தொடர்ந்து, ‘கிங்’ என்ற புதிய படத்தில் அவர் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். மே 18ம் தேதியிலிருந்து இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. ஆக்ஷன் கலந்த இந்த திரைப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கவிருக்கிறார். இதில் அபிஷேக் பச்சன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

2023ம் ஆண்டிலேயே இந்தப் படத்தில் ஷாருக்கானை ஒப்பந்தம் செய்தபோது, கதாநாயகியாக தீபிகா படுகோனேவை தேர்வு செய்து முடிவெடுத்திருந்தனர். ஆனால் அவர் அப்போது கர்ப்பமாக இருந்ததால், ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்த நயன்தாராவை இந்த படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டனர்.
எனினும், ‘கிங்’ படம் 2024ல் துவங்க வேண்டியிருந்தாலும் சில காரணங்களால் தாமதமாகி 2025 மே மாதம் தான் துவங்கப்போகிறது. தற்போது தீபிகா படுகோனே குழந்தை பெற்ற பின் மீண்டும் நடிப்பில் ஆடுபட ஆரம்பித்துவிட்டார். இதனால் ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டபடியே, தீபிகா படுகோனேவையே இந்த படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்துள்ளனர். இதனால், இந்த வாய்ப்பு நயன்தாராவிடம் இருந்து தவறி போய்விட்டது.