கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் நடிகர் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்துள்ள படம் “ரெட்ரோ”. தற்போது இந்த படம் நாளை வெளியாகிறது.இந்த படத்திலிருந்து வெளியான “கனிமா” பாடல் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகியுள்ளது. இந்த பாடலுக்கு பல நடிகைகளும் நடனமாடி வீடியோக்கள் பகிர்ந்தனர்.

இந்த பாடலின் படப்பிடிப்பு 15 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் (சிங்கிள் ஷாட்) எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடிகர் சூர்யா சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, “இந்த 15 நிமிடங்கள் முழுவதும் ஒரே ஷாட்டில் நடனம், சண்டைக் காட்சி மற்றும் உரையாடல்கள் ஆகியவற்றை சமாளிக்க வேண்டியது மிகவும் சவாலானது. படக்குழுவின் ஒவ்வொருவரும் இதில் பங்கேற்று சிறப்பாக செய்ய வேண்டும்” என்று கூறினார்.
அந்த ஷாட்டின்போது கேமிரா இடமிருந்து இடம் நகரும். பால்கனி, தரைதளம், மேல்தளம் ஆகிய இடங்களில் கேமிராமேன் தொடர்ந்து நகர்ந்து காட்சிகளை பதிவு செய்வார். இந்த காட்சியில் பல சம்பவங்களும், உணர்ச்சி மிகுந்த தருணங்களும் இடம்பெறுகின்றன. சிங்கிள் ஷாட்டில் நடனம், சண்டை காட்சிகள் மற்றும் உரையாடல்கள் அனைத்தும் உள்ளதால், ஒவ்வொருவரும் சிறந்த முறையில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இதில் ஒரு புதிய நடனக் கலைஞரும் அறிமுகமாகிறார்.
கனிமா பாடல் படத்தின் தொடக்கக் கட்சியாக வருகிறது. இதில் பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனை திரையரங்கில் பார்ப்பது அனைவருக்கும் ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும் என்று சூர்யா தெரிவித்துள்ளார்.