விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” தொடரில், மீனா என்ற கதாபாத்திரமாக கோமதி பிரியா நடித்துவருகிறார். இதில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்ணாக நடித்துள்ள அவர், தனது நடிப்பின் மூலம் பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளார்.

இந்த தொடரில் வெற்றி வசந்த் அவருக்கு ஜோடியாக நடித்துவருகிறார். கோவில் தெருவில் பூ விற்கும் இளம் பெண், வாடகை கார் ஓட்டுநரை திருமணம் செய்து கொண்டு, பின்னர் புதிய வீட்டில் சந்திக்கும் சவால்களே “சிறகடிக்க ஆசை” தொடரின் மையக் கருவாகும். நடுத்தர குடும்ப வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதையை, தனது இயல்பான நடிப்பால் கோமதி பிரியா சிறப்பாக உயிரூட்டிக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையில், கர்நாடக மலைப்பகுதிகளுக்கு பயணம் செய்துள்ள கோமதி பிரியா, கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்க முடியாத மகிழ்ச்சி பயணத்தின் போது கிடைக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் மலைகளில் சென்று கொண்டிருந்த ஜீப்பில் அமர்ந்தபடி எடுக்கப்பட்ட ஒரு விடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார். பயணத்தை மிகவும் விரும்பும் கோமதி பிரியாவின் இந்த விடியோக்கு ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.