‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு, நடிகர் அல்லு அர்ஜுன் தமிழ் இயக்குநர் அட்லீயுடன் இணைய உள்ளார். ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படத்தின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து அட்லீ இந்த புதிய படத்தை இயக்கவுள்ளார்.

அல்லு அர்ஜுன் அட்லீ இயக்கத்தில் நடிக்க உள்ள முதல் படம் என்பதால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இந்தப் படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ஜான்வி கபூர் மற்றும் மிருணாள் தாகூர் இருவரும் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது. தற்போது மூன்றாவது கதாநாயகியாக அனன்யா பாண்டே இணைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.