மலையாளத் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் மஞ்சு வாரியர். இவர் தமிழில் ‘அசுரன்’, ‘துணிவு’, ‘விடுதலை 2’, ‘வேட்டையன்’ போன்ற வெற்றிப் படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துவருகிறார்.
இந்நிலையில், உலக நடன தினத்தை முன்னிட்டு நடிகை மஞ்சு வாரியர், குச்சிப்புடி நடனமாடும் வீடியோவினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது, உலகளவில் ஏப்ரல் 29ஆம் தேதி சர்வதேச நடன தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள், புகழ்பெற்ற பாலே நடனக் கலைஞரான ஜீன் ஜார்ஜஸ் நாவ்ரோவின் பிறந்த நாளை நினைவுகூரும் விதமாக அமைந்துள்ளது. அவருடைய கலைப்பணி மற்றும் பங்களிப்பை போற்றும் நோக்கில் இந்த நாள் உலக நடன தினமாக அனுசரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.