மணிரத்னம் இயக்கியுள்ள ‘தக்லைப்’ படத்தில் நடித்து முடித்த சிம்பு, தற்போது தொடர்ந்து மூன்று படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவல் அவரது பிறந்தநாளன்று வெளியிடப்பட்டது.
அந்த மூன்று படங்களில், சிம்புவின் 49வது படத்தை ‘பார்க்கிங்’ படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார், மேலும் இசையை சாய் அபயங்கர் அமைக்கிறார். இப்பொழுது இப்படத்தின் ஆரம்ப வேலைகள் தொடங்கியுள்ள நிலையில், மிக விரைவில் படத்தின் படப்பிடிப்பும் தொடங்க இருக்கிறது.
இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் தற்போது, ‘டிராகன்’ படத்தில் நடித்த கயாடு லோகரை இந்த படத்தில் நடித்துப் போகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை, தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ், அதிகாரபூர்வமாக அறிவித்து உறுதி செய்துள்ளது.