நடிகை ரவீனா தாஹாவுக்கு ரெட் கார்ட் கொடுத்ததாக வெளியான தகவல் இணையத்தில் கட்டுத்தீ போல பரவி வந்தது. இந்த செய்தி குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை ரவீனா தாஹா, அந்த சீரியலின் கதையை சொல்லும் போது எனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரமாக இருந்தது. ஆனால், அந்த கதையில் மேலும், ஒரு நடிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இருந்ததால், சீரியலை விட்டு விலகிவிட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், ரவீனா தாஹா, தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில், அது என தனிப்பட்ட விருப்பம் என்று கூறியிருந்தார். மேலும், தன் மீதான புகார் தெரிவிக்கப்பட்டது உண்மைதான் என்றும், அதற்காக சீரியல்களில் நடிப்பதற்கு தடை விதிக்கப்படவில்லை என்றும் அந்த பிரச்சனை சுமூகமாக பேசி முடிக்கப்பட்டுவிட்டதாகவும் நடிகை ரவீனா கூறியிருக்கிறார்.
