மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் தொடரும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகியாக நீண்ட இடைவெளிக்கு பிறகு மோகன்லால் உடன் இணைந்து ஷோபனா நடித்துள்ளார். ஆபரேஷன் ஜாவா புகழ் தருண் மூர்த்தி இயக்கியுள்ளார். இப்படம் குறித்த பாசிட்டிவ் விமர்சனங்களை கேள்விப்பட்டதாக கூறி தருண் மூர்த்தியை பாராட்டினார் மோகன்லால். அப்போது தருண் மூர்த்தி, தான் திரையரங்கில் இப்போதுதான் படம் பார்த்துவிட்டு வருவதாகவும் ரசிகர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள் என்றும் கூறியபடி மோகன்லாலுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருப்பதை ரசிகர்களிடம் காட்டினார். ரசிகர்களின் உற்சாகத்தை பார்த்த மோகன்லாலும் அவர்களிடம் சில வார்த்தைகள் உரையாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
