ஐதராபாத்தில் உள்ள ஜேஆர்சி கன்வென்ஷன் சென்டரில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் விஜய் தேவரகொண்டா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளார். சூர்யாவுடன் ஒப்பிடும் போது விஜய் தேவரகொண்டா ஜுனியர் நடிகர்தான். இருந்தாலும் ‘ரெட்ரோ’ படம் இளைஞர்களுக்கான படம் என்பதால் தெலுங்கில் உள்ள இளம் ரசிகர்களைக் கவரும் விதத்தில் விஜய் தேவராகொண்டாவை அழைத்துள்ளார்களாம்.
