பூரி ஜெகநாத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியை நடிக்கவுள்ள புதிய திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாக உள்ளது. இந்தப் படத்தை பூரி ஜெகநாத் மற்றும் சார்மி கவுர் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தபு நடிக்கவுள்ளார் என்பதை அண்மையில் படக்குழு அறிவித்திருந்தது. அதேபோல, இந்தப் படத்தில் கதாநாயகியாக ராதிகா ஆப்தே ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்திரைப்படம் ஒரு பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் காரணத்தால், இதற்கு பொதுவாகவும், கதைக்கு பொருத்தமாகவும் இருக்கும் வகையில் ‘பெக்கர்’ என தலைப்பு சூட்டப்பட்டுள்ளாதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.