தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்கள் ‘கீனோ’ என்ற படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த படத்தை கந்தர்வா செல்லுலாய்ட்ஸ் கிரியேட்டர்ஸ் சார்பில் கிருத்திகா காந்தி தயாரிக்க, திரைப்பட கல்லூரியில் இயக்குதல் துறையில் படித்து முதல் மாணவராக தேர்ச்சி பெற்ற ஆர்.கே. திவாகர் இயக்கி இருக்கிறார். படம் குறித்து அவர் கூறும்போது, இதுவரை நாவல்களிலோ, திரைப்படங்களிலோ சொல்லப்படாத கதை கருவும், கீனோ என்ற கதாபாத்திரமும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதிதாகவும், புதுமையானதாகவும் இருக்கும். படத்தின் தயாரிப்பாளர் கிருத்திகா காந்தியும், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மகாதாரா பகவத்தும் கல்லூரியில் முதல் மாணவர்களாக திரைப்பட விருது பெற்றவர்கள் ஆவார்கள், என்றார்.

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more