கர்நாடகாவை சேர்ந்த நரசிம்மா மூர்த்தி என்பவர், கிராபிக் டிசைனரான நூதன் என்பவருடன் இணைந்து முழு ஏஐ திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். ‘லவ் யூ’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில், கதாநாயகன், கதாநாயகி, இசை, ஒளிப்பதிவு உள்ளிட்ட அனைத்தும் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. இப்படத்தை உருவாக்க மொத்தமே ரூ.10 லட்சம் தான் செலவானதாம். அதுவும் ஏஐ மென்பொருள் உரிமங்களுக்காக மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 95 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படத்துக்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழும் வழங்கியுள்ளது. மொத்தம் 12 பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. முழு படத்தையும் ஆறே மாதங்களில் உருவாக்கியுள்ளனர்.
